1980 களின் அந்தியில் கோயம்புத்தூர் காந்திபுரம் ஏழாம் வீதி கடைகளின் பெயர்ப்பலகைகள் தான் எனக்கு தமிழ் கற்று தந்தன.
அடுமனையகம்
ஆயுத்த ஆடையகம்
தேனீரகம்
bakery, readymade, டீக்கடை என்று நல்ல தமிழில் இன்னும் வழங்க ஆரம்பிக்காத நாட்கள். தமிழும் அரசியலும் பிணையாத நாட்கள். வருடத்திற்கு ஒரு முறையேனும், ' வாங்க, போங்க, என்னங்க' என்ற கொங்குத்தமிழால் சிலிர்த்து உறைந்த மழை கூட பனிக்கட்டியாக பெய்த நாட்கள்.
மறத்தமிழனுக்கு மரியாதைத்தமிழை கற்றுக்கொடுத்த கோவை. எனக்கு அழகாக பொய் சொல்லக்கற்றுகொடுத்த கோவை. அதைக்கொண்டு முதல் காதலின் சுகம் பயில கற்றுகொடுத்த கோவை. நாற்பது நிமிட பேருந்து பயணங்களில் நட்பை அறிமுகபடுத்திய கோவை. முதன் முதலில் எனக்கு மேடையின் போதையை ஏற்றிய கோவை.
என்னடா இவன் கோவைக்கு இவளோ அடி போடறானே.....எங்க ஊர்லயும்...எனக்கும் இது மாதிரி தானேன்னு பார்க்காதீங்க......சென்னை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, கம்பம், உசிலம்பட்டின்னு இன்னும் நீங்க எல்லாரும் வளர்ந்த ஊரும் இப்படிதான்...நான் மறுக்கலை...எனக்கு கோவை என்பது ஒரு பழக்கம்....ரொம்ப நாள் பழக்கம்.....நான் மறக்க முடியாத, மறக்க விரும்பாத ஒரு பழக்கம்......காந்திபுரத்திலிருந்து பீளமேடு வரை சைக்கிள் மெதிச்சா பாபநாயக்கன்பாளையம் பெருமாள் கோயில் கிட்ட மேடு வரும், அப்போ அழுத்தி மிதிக்கணும்னா ஒரு ரெண்டு வீதி முன்னால இருந்து மெதுவா போகணும், அப்போதான் கெஸ்ஸு ( மூச்சு) வாங்காதுன்னு தெரியற ஒரு பழக்கம்......பல்லாயிரம் மைல் தாண்டியும் நினைத்தால் புன்னகை தரும் அந்த பழக்கத்திற்கு, அந்த நட்பிற்கு, அந்த கோவைக்கு இந்த முதற் பதிவு சமர்ப்பணம்...
மீட் அண்ட் க்ரீட்
7 years ago
12 comments:
மீ தி ஃபர்ஸ்ட்டூ.. ;-)
எல்லாம் ஓக்கேதான்.. ஆனா எங்களுக்கு ஜெர்மன் மொழியெல்லாம் படிக்க தெரியாதே.. ;-)
கோவைய்லிருந்து ஒரு அணிலாய் வந்திருக்கீங்க பதிவுலகத்துக்கு. கலக்க வாழ்த்துக்கள். ;-)
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி....ஆரம்பிச்சிட்டாங்கயா...ஏங்க புதுப்பையனை கலாய்க்கிறீங்க....கோயம்புத்தூருக்கே லொள்ளா! ஜெர்மன் எல்லாம் சும்மா ஒரு ரெண்டு வார்த்தை தெரிஞ்சி வச்சிருக்கேன் ( மக்களுக்கு மெயில் தட்டி விடும் போது கடைசியில ஒரு ஷோவுக்காக)..
இதுக்கு பேர்தான் உங்க ஊருல ரெண்டு வார்த்தை தெரிஞ்சு வச்சிருக்கிறதா?
Kommentar veröffentlichen unter:
4 Kommentare
Ursprünglichen Post anzeigen
Alle Kommentare anzeigen
Sie können HTML-Tags verwenden, z. B.
Wortbestätigung
Geben Sie die Zeichen aus dem oben angezeigten Bild ein.
Wählen Sie eine Identität aus.
Sie veröffentlichen Posts derzeit als
Ein anderes Konto verwenden
Folgekommentare werden gesendet an
(யப்பா.. எழுதி முடிக்கிறதுக்குள்ளே எனக்கே மூச்சு வாங்குது. ;-))
நீங்க வேற...அது ஏதோ 'Google' பிரச்சனை! என்ன பண்ணாலும் இணையதளத்தோட மொழி மாற மாட்டேன்குது!
http://blogger.com/home
--> Dashboard --> Settings in 'அட என்னங்க' --> Formatting --> Language --> இங்கே English choose பண்ணுங்க.
;-)
அந்த அளவுக்கு மோசம் இல்லீங்க....அதெல்லாம் பண்ணியாச்சு.... :)....இப்போ சரி ஆயிருக்கும்...போர்மட்டிங்ல ஜெர்மன் இருந்திச்சு.... உதவிக்கு நன்றி ;-)....
சூப்பர் ;-)
அய்யா, சிறுவாணித் தண்ணி நல்லாவே வேலை செய்யுதுங்கோய்..... அங்கண்ணன் கடை பிரியாணி, கௌரி சங்கர் கடை இட்லி, பீளமேட்டு அமுதம் அங்காடி மளிகை சாமான்னு அருமை பெருமைய விளக்கமா ஒரு பதிவு போட்டா என்னுங்கோ?
வணக்கம் ...வருகைக்கு நன்றி.....கண்டிப்பா எழுதறேண்ணா....இன்னும் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தொட்டு, நம்மூர் பரோட்டா கடை வரைக்கும் ...ஆகா சொல்ல சொல்லவே நாக்குல எச்சி ஊருது.....
என்னுடையதைப் போல தமில், தமிள், Tamil பதிவுகளுக்கு நடுவில் உங்கள் தமிழ்ப் பதிவு நம்பிக்கையூட்டுகிறது.
சத்யராஜ்: என்ன மணி நான் சொல்றது?
மணிவண்ணன்: என்னது மணியா?
சத்யராஜ்: ஆமா, மணிதானுங் உங்க பேரு!
nice post thank for sharing this.
T20 World Cup 2020 Fixture Download
T20 World Cup 2020 Schedule Download
Post a Comment