Friday, August 15, 2008

தங்க மகன்

அட தலைவர் படம் இல்லீங்க....நம்ம அபினவ் பிந்த்ரா பற்றி. எதேட்சையா அவரோட blog கண்ணில் பட்டுது. எல்லாரும் ராஜ்யவர்தன் சிங் ராதோரை கவனிபிக்கிட்டு இருந்தப்போ, கேப்ல கடா வெட்டன (சுட்ட?) மனிதர். ஒரு பெரிய வியாபாரக்காந்தத்தோட மகன். மனுஷன் நம்மள மாதிரி தீடீர்னு ஒரு நாள் பெயிஜிங் போனதும் ஒரு Blog தட்டி விட்டிருக்கிறார் ( நம்மள மாதிரி பெயிஜிங் போனப்ப இல்லீங்க, நம்மள மாதிரி திடீர்னு!). ஒரு சாமானியன் ஒரு பில்லியன் மக்களுக்கு ஹீரோவான கதை. அந்த கடைசி நாலு நாள் தான் பதிவு போட்டிருக்கிறார். ரொம்ப அசால்டான ( சரி, இயற்கையான) பதிவு. மெடல் வாங்கினதும் எஸ்கேப் ஆகி நண்பர்களோட சாப்பிட போன விஷயம் 'லைட்டா' டச் பண்ணும். http://abhinavbindra.blogspot.com/

பிகு1: இங்க நம்ம ஜெர்மன் நண்பருக்கெல்லாம் அவங்க ஊர் அம்மணி ட்ரைனிங்ல நம்ம ஆள் தங்கம் வாங்கினதால ஒரு மகிழ்ச்சி.

பிகு2: சைலெண்டா இதுக்கு உதவி பண்ணதுல NRI தொழிலதிபர் மிட்டலுக்கும் ஒரு பங்கு. இங்கே

பிகு3: இதே போல் நான் விரும்பிப்படிக்கும் ( படித்த, ஏனோ கொஞ்ச காலமாய் பதிவு இல்லை) இன்னொரு blog , நம்ம இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சய் பங்கருடைய உள்ளூர் கிரிக்கெட்டை பற்றிய Cricinfo blog இங்கே.

7 comments:

Mahesh said...

வாங்கண்ணே.... வாழ்த்துக்கள் !!

சமீப காலமா நம்ம ஊருக்காரங்க நெறய பேரு பதிவு போடறாங்க. நானும் போன வாரம் எழுத ஆரம்பிச்சேன்.

1. உங்க பரிவ என் பதிவுல இணைச்சுடறென்
2. பின்னூட்டத்துக்கு வர்ட் கன்ஃபர்மேஷன் எடுத்து விட்டுடுங்க
3. நெறய எழுதுங்க.

அணிலன் said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. ஆபிசர் சொன்னதை எல்லாம் செஞ்சிட்டேன். உங்க பதிவுகள் பின்னுது....கொங்கு மண்டலத்தை பதிவுலகத்தில் அதன் உரிய இடத்திற்கு கொண்டு செல்வோம்......ச்சே......அது எங்கிருந்துதான் வருதோ அந்த கோஷ்டி மனப்பான்மை...!!!!!

Mahesh said...

என்ன ஆச்சுண்ணே? மௌனகுருசாமி ஆயிட்டீங்க? வேலை அதிகமோ? சில பதிவுகள படிச்சப்ப்றம் தெரிஞ்சுது... வேலை அதிகம்கிறதை "ஆணி சேந்து போச்சு"ன்னு சொல்றாங்க.. :D

அணிலன் said...

...நீங்க வேற....ஆணி சேர எல்லாம் இல்லே...இருக்கிறே ரெண்டு ஆணிய மாதி மாதி நாமலே யாரும் பார்க்காதப்போ அடிச்சிட்டு அப்றமா புடுங்கற மாதிரி நடிக்கறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா.......கடைசிலே விஷயம் தெரிஞ்சுபோய் இங்க புடுங்கனது போதும் அந்த ஊருக்கு போய் புடுங்குங்கன்னு இம்சை பண்றாங்க......அத தவிர நாங்கெல்லாம் 'Peter'ன்னு ரொம்ப நாள் கழிச்சு ஆங்கிலத்தில http://itsanuttylife.blogspot.com/ பதிவு போட்டேன்....எதுக்கு இந்த வெட்டி பந்தான்னு நீங்க கேக்கறது காதுல விழுது......பொலம்ப நெறைய விஷயம் இருக்கு....வர்றேன்......

Mahesh said...

உங்களை ஒரு தொடர் பதிவுக்கு "டேக்" பண்ணியிருக்கேன்... நம்ம வலைப்பக்கத்துக்கு வரவும்

.:: மை ஃபிரண்ட் ::. said...

அணிலன், அது சரி.. என்ன ப்ளாக் காத்து வாங்குது? புது பதிவு எங்கேப்பா? ;-)

அணிலன் said...

நெசமாவே ஒரு ரெண்டு மூணு வாரமா கடைய மாத்த வேண்டியதா போச்சு....அதான் முடியல....(சாதாரணமாவே பதிவு போடறது கஷ்டம்)...ஏதோ நெனைச்சித எழுதிட்டேன்...